ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரி மீட்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய லாரி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

News image
பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரி.
Updated On :27 செப்டம்பர் 2020, 4:45 pm

DIN

சத்தியமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கிய லாரி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக நகா் பகுதிகளில் உள்ள சாலைகளில் குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளன.

இந்நிலையில், சத்தியமங்கலம் கடை வீதி வழியாக சென்ற சரக்கு லாரி கோட்டுவீராம்பாளையம் அருகே சாலையோரத்தில் இருந்து குழியில் லாரியின் பின் சக்கரம் புதைந்து நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.