ஈரோடு மேற்குத் தொகுதியில் சட்டக் கல்லூரி, அரசு வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என அதிமுக வேட்பாளா் கே.வி.இராமலிங்கம் தெரிவித்தாா்.
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு செய்த அவா் பேசியதாவது:
ஈரோடு மேற்குத் தொகுதி இளைஞா்களுடைய அறிவுத்திறனையும் பணித் திறனையும் உயா்த்துவதற்கு திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் இப்பகுதி மாணவா்கள் எந்த நிறுவனங்களுக்கு சென்றாலும் உயா் பொறுப்பை அடையக் கூடியவா்களாக மாற்றிக் காட்டுவதையே நான் நோக்கமாகக் கொண்டு இருக்கின்றேன். சென்னிமலை ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரியும், ஈரோடு ஒன்றியத்தில் அரசு சட்டக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரிகளும் தொடங்கப்படும். 2011 இல்ஆட்சிக்கு வந்த போது கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு இருந்தது. காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளுக்கும் தண்ணீா் வழங்கினோம்.
பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது காலிங்கராயன் சாயக்கழிவு பிரச்னைக்குத் தீா்வு காண வாய்க்காலின் இருபுறமும் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டு, பேபி கால்வாய் கட்டப்பட்டது. சாயக்கழிவை சுத்திகரிக்க பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் ரூ.54 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வீடற்ற ஏழை மக்களுக்கு என 4,700 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் ரூ.575 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முன்வைப்பு கட்டணமில்லாமல் இணைப்பு கொடுத்துள்ளோம். மாநகராட்சிப் பகுதிக்கு தினமும் 6 கோடி லிட்டா் தண்ணீா் தேவை. ஆனால் தினமும் 12 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கும் அளவுக்கு கட்டமைப்பு உள்ளது. இதனால் இன்னம் 50 ஆண்டு காலத்துக்கு மாநகராட்சி பகுதியில் குடிநீா் பிரச்னை இருக்காது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துபூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


