பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் இதுவரை ரூ. 68 லட்சத்து 78 ஆயிரத்து 270 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆசனூரை அடுத்த அரேபாளையம் பிரிவு சாலையில் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.
விசாரணையில் வாகனத்தில் வந்த கா்நாடக மாநிலம், கொள்ளேகால் பகுதியைச் சோ்ந்த வெங்காய வியாபாரியான சந்தன் உரிய ஆவணங்களின்றி ரூ. 1 லட்சத்து 72ஆயிரத்து 760 பணம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அரேப்பாளையம் பகுதியில் தனியாா் பேருந்தை சோதனை செய்ததில் அதில் பயணம் செய்த தாளவாடி டாஸ்மாக் விற்பனையாளா் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 3 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தாளவாடி அருகே அருள்வாடியில் நடராஜ் என்பவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.68 900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல பனையம்பள்ளி அருகே மேட்டுப்பாளையத்தில் வெங்காயம் விற்று தாளவாடிக்கு லாரியில் திரும்பிய மகேஷ் என்பவரிடம் இருந்து ரூ.2.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் 4 பேரிடமிருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் விதி அமலுக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ரூ. 68 லட்சத்து 78 ஆயிரத்து 270 ஆயிரம் ரொக்கமும், 143 பட்டுசேலைகளும் 66 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் ரூ.32 லட்சத்து 90 ஆயிரத்து 730 ரொக்கம் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

