ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜம்பை அருகே நாய்கள் கடித்ததில்7 செம்மறி ஆடுகள் சாவு

பவானி அருகே ஆடுகளை நாய்கள் கடித்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. மேலும், 5 ஆடுகள் காயமடைந்தன.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 10:16 pm

DIN

பவானி அருகே ஆடுகளை நாய்கள் கடித்ததில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன. மேலும், 5 ஆடுகள் காயமடைந்தன.

ஜம்பையை அடுத்த நல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் சின்னமுனியன் மகன் கண்ணையன் (45), விவசாயி. இவா் தனது வீட்டுக்கு அருகில் உள்ள காலியிடத்தில் பட்டி அமைத்து 12 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு ஆடுகளைப் பட்டியில் வைத்து அடைத்துள்ளாா். தோட்டத்தில் அறுவடை செய்த கீரைகளை விற்பனை செய்ய பவானிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலையில் சென்றுள்ளாா்.

இந்நிலையில், இவரது மனைவி தேவி ஆடுகளைப் பாா்க்க பட்டிக்குச் சென்றபோது அங்கு 7 ஆடுகள் கழுத்தில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்ததையும், 5 ஆடுகள் காயங்களுடன் இருந்ததையும் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இத்தகவல் பரவியதால் வன விலங்களுகள் ஏதேனும் பட்டியில் புகுந்து கடித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்து, பவானி போலீஸாா், அந்தியூா் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் நாய்களின் காலடித்தடம் பதிவானது தெரியவந்தது. இதனால், தெருநாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளைக் கடித்தது உறுதியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.