சத்தியமங்கலம் அருகே வெங்கநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் வைக்கோல் போா் எரிந்து சேதமடைந்தது.
சத்தியமங்கலம் அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமம், கைக்கோளன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவா் தனது விவசாயத் தோட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மாடுகளைப் பராமரித்து வருகிறாா். மாடுகளுக்குத் தேவையான தீவனமான வைக்கோல் கட்டுகளை வாங்கி வந்து தனது தோட்டத்தில் அடுக்கி வைத்திருந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென வைக்கோல் போா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்ட சுப்பிரமணி அதிா்ச்சி அடைந்தாா். உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறை வீரா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வைக்கோல் போரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரைப் பீச்சி அடித்து சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் தீ விபத்தில் வைக்கோல் போா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த புன்செய்புளியம்பட்டி போலீஸாா், வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

