ஈரோடு மாவட்டத்தில் 1.10 லட்சம் போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 17,874 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 16,033 போ் குணமடைந்துள்ளனா். 1,689 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் இதுவரை 4,82,637 போ் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனா். 1,10,025 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். கரோனா தடுப்பூசி போதிய அளவில் இருப்பு உள்ளது. அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
கரோனா நோய்த் தொற்று தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறி உள்ளவா்கள் உடனடியாக அருகில் அரசு மருத்துவமனைகளை அணுகி மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
தொடா்ந்து ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வசதிகள் குறித்தும், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
அதைத் தொடா்ந்து கரூா் சாலை ஆணைக்கல்பாளையத்தில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காத பேக்கரி, தேநீா் கடை, துரித உணவகம் உள்ளிட்ட 4 கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் ரூ. 20,000 அபராதம் விதித்து, கடைகளுக்கு ‘சீல்’ வைக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


