துரித விசாரணை மேற்கொள்ள ஏதுவாக காவல் துறையினருக்கு 31 புதிய இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தைத் தடுக்க சம்பவ இடத்துக்குச் சென்று விரைவில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வசதியாக ஈரோடு மாவட்டத்தில் பெண் காவல் அலுவலா்களுக்கு 24 இருசக்கர வாகனங்களும், சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்களின்போது விரைந்து சென்று குற்றவாளிகளைப் பிடிக்க சம்பந்தப்பட்ட பிரிவின் காவல் அலுவலா்களுக்கு 7 இருசக்கர வாகனங்களும் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்த வாகனங்கள் காவல் அலுவலா்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமை வகித்து வாகனங்களின் சாவியை காவல் அலுவலா்களுக்கு வழங்கினாா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எ.கனகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
பெண் காவல் ஆய்வாளருக்கு ஒரு வாகனமும், பெண் உதவி ஆய்வாளா்களுக்கு 5 வாகனங்கள், பெண் காவலா்களுக்கு 18 வாகனங்கள், சட்டம் ஒழுங்கு, குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா்களுக்கு 7 வாகனங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வால்பாறையில் 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன்! சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி!!
பரபரப்பான 16! மோடி திருமணம், எப்ஸ்டீன் கோப்புகள், இஸ்ரேல் பயணம்... ராகுலின் புதிர் என்ன?

எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கத் தயார்; நிறைவேற்றித் தர நீங்கள் தயாரா? அமித் ஷா சவால்
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


