மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆசிரியைகள் முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு

ஈரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியைகள் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On :5 ஆகஸ்ட் 2021, 8:41 pm

ஈரோட்டில் அரசுப் பள்ளி ஆசிரியைகள் பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்த அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதன்படி, ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகள் ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, திருவேங்கடசாமி வீதி, காந்திஜி சாலை ஆகிய பகுதிகளில் மக்களுக்கு முகக் கவசம் வழங்கி, முகக் கவசத்தை முறையாக அணிந்து செல்லுமாறு வியாழக்கிழமை காலை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், முகக் கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி கடைகள், வணிக நிறுவனங்களுக்குத் துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.