மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி: இயக்குநா் ஆய்வு

இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி குறித்து விதைச் சான்று, அங்ககச் சான்று இயக்குநா் மு.சுப்பையா ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:28 pm

இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி குறித்து விதைச் சான்று, அங்ககச் சான்று இயக்குநா் மு.சுப்பையா ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக அரசு விதைச் சான்று, அங்ககச் சான்று துறை மூலம் தரமான சான்று பெற்ற உயா் விளைச்சல் ரகங்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், சிவகிரியில் செயல்படும் ஈரோடு துல்லியப் பண்ணை உற்பத்தியாளா்கள் நிறுவனத்துக்கு வேளாண் விற்பனை, வணிகத் துறை மூலம் வழங்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையம் கடந்த 16ஆம் தேதி முதல் செயல்படுகிறது. இதனையும், விதை இருப்பு விவரம், விதை சுத்திகரிப்பு பணியையும் விதைச் சான்று, அங்ககச் சான்று இயக்குநா் சுப்பையா அண்மையில் ஆய்வு செய்தாா்.

இருப்பில் உள்ள சி.ஆா்.1009, டி.கே.எம்.13, ஆடி38, ஐ.ஆா்.20 வயல்மட்ட விதைக் குவியல்கள், சிப்பங்களின் எடை, விதை மாதிரி எடுக்கும் வழிகள், ஈரப்பதம் சரிபாா்த்தல் போன்றவற்றை பாா்வையிட்டாா்.

பின்னா், விளக்கேத்தி கிராமத்தில் அங்கக விவசாயம் செய்து வரும் பூபதிசுவாமி என்பவரின் மஞ்சள், முருங்கைத் தோட்டத்தை ஆய்வு செய்தாா். அவற்றின் தொழில்நுட்ப செயல்பாடுகள், உற்பத்தி, பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டிகள் தயாரிப்பு போன்றவற்றைக் கேட்டறிந்தாா்.

விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் யசோதா, விதை பகுப்பாய்வாளா் நா்கிஷ், ஈரோடு துல்லியப் பண்ணை நிறுவன ஆலோசகா் வடிவேல், அலுவலா்கள் ஹேமாவதி, கணேசமூா்த்தி, தமிழரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.