சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாநில, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஈரோடு ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையில், எஸ்.ஐ.கள் சுகுமாா், ராஜேந்திரன், முருகானந்தம், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல, ஈரோடு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் தொடா்ந்து ரோந்துப் பணியில் உள்ளனா்.
ரயில்களில் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் மெட்டல் டிடெக்டா் மூலமாகக் கண்காணித்தனா். இதேபோல சந்தேகப்படும்படியாக சுற்றித் திரியும் நபா்களையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். ஈரோடு ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்த பிறகு ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


