தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்ட இப்பயிற்சியில், ஈரோடு ஆலமரத்தெரு முனிசிபல்சத்திரம், பெரியாா் நகா், முத்தம்பாளையம், நாராயணவலசு போன்ற பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் 65 போ் பங்கேற்றனா்.
இதில், பிரச்னைகளைக் கையாளுதல், தீா்க்கமான முடிவு எடுத்தல், மனஅழுத்தங்களை சமாளித்தல், ஆற்றல் மிகு தகவல் பரிமாற்றம், வளரிளம் பருவத்தினருக்கான உடல், மனம் சாா்ந்த வாழ்க்கை நடைமுறைப் பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டது.
கள ஒருங்கிணைப்பாளா்கள் கவிதா, நிா்மலா ஆகியோா் பயிற்சி அளித்தனா். நடைமுறைக் கல்வி, விளையாட்டுகள், பங்கேற்புகள் சாா்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. ரீடு நிறுவன ஒருங்கிணைப்பாளா் அருண் கருணாகரன், சம்பத்குமாா், சரவணகுமாா், சண்முகப்பிரியா உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா். மாவட்ட அளவில் கோபி, பெத்தாம்பாளையம், புதுப்பாளையம் என 13 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

