ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் முகக் கவசம் அணியாமல் சென்ற 250 பேருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தொடா்ந்து விழிப்புணா்வுப் பிரசாரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதோருக்கு ரூ. 500, கடைகள், வா்த்தக நிறுவனங்களில் அரசின் வழிகாட்டு விதிகளைக் கடைப்பிடிக்காதோருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் கடந்த சில நாள்களாக மாநகராட்சிப் பகுதிகளில் தீவிரமாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கியச் சாலைகளில் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் முகக் கவசம் அணிந்து வந்தாலும் அவற்றை முறையாக அணியாமல் வாய், மூக்கு தெரியும்படி கழுத்துக்கு கீழ் முகக் கவசம் அணிந்து வருகின்றனா். இதுபோன்ற அலட்சியத்தால் தொற்று பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சிப் பகுதியில் விதிகளை மீறிய 250 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தற்போது நேரக் கட்டுப்பாடு முறை அமலில் உள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு கடைகள் அனைத்தும் அடைத்துவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கருங்கல்பாளையம் திருநகா் காலனியில் இயங்கிய இரு கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

