620 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை தீவிர சிகிச்சையால் 1.8 கிலோவாக உயர்வு
620 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை தீவிர சிகிச்சையால் 1.8 கிலோவாக உயர்ந்தது.


620 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை தீவிர சிகிச்சையால் 1.8 கிலோவாக உயர்ந்தது.
பெங்களூரை சேர்ந்த திருமணமான தம்பதியினர், கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாத அவர், ஈரோடு சுதா மருத்துவமனையில் செயற்கை கருவுறுதல் மூலம், முதல் முறையாக கர்ப்பமானார். அவருக்கு கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்தது. மேலும், குழந்தையின் பனிக்குடநீர் மிக குறைவாக இருந்தது. இதனால், 25 வது வாரத்திலேயே அவசர அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. ஆண் குழந்தை பிறந்த போது, 620 கிராம் மட்டுமே இருந்தது.
பிரசவத்தின் போது குழந்தைக்கு மூச்சு திணறல் அதிகமாக இருந்தது. இதனால், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், குழந்தைக்கு நுரையீரலில் ரத்த கசிவு இருந்ததாலும், குறைமாத தன்மையால் நுரையீரல் முதிர்ச்சியின்மை காரணமாக, 2 வாரத்திற்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது. குறைமாத தன்மையால், குழந்தைக்கு உடல் வளர்ச்சி சரியாக இல்லை. இதனால், குழந்தைக்கு ஊசி மூலம், நரம்பு வழியாக தேவையான சத்துகள் கொடுக்கப்பட்டது. குழந்தைக்கு ரத்தம் குறைவாக இருந்ததால், 4 முறை ரத்தம் செலுத்தப்பட்டது.
குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில், குழந்தைக்கு 100 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. குறைமாதம் மற்றும் எடை குறைவாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் விழித்திரை பிரச்னை மற்றும் மூளையில் ரத்த கசிவு போன்றவை இந்த குழந்தைக்கு இல்லை. சிகிச்சை முடிந்து குழந்தை டிஸ்சார்ஜ் ஆகும்போது, குழந்தையின் எடை 1.8 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. மிகவும் மோசமான நிலையில் இருந்த குழந்தைக்கு, சிறப்பான சிகிச்சை அளித்த பச்சிளம் குழந்தைகள் மருத்துவர்கள் எஸ். ரங்கேஷ், என். கெளரிசங்கர் ஆகியோருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
மேலும் குழந்தைகளுக்கு என சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பெரியவர்களுக்கு பொது மருத்துவம், இருதயம், மூளை ஆகிய நோய் பிரிவுகள், தீவிர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...