மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

எல்பிபி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்கத் தடை விதிக்கக் கோரிக்கை

 கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:39 pm

 கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கீழ்பவானி முறை நீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்புச் செயலாளா் கி.வடிவேல், தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சுப்பு ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

கீழ்பவானி பாசன வாய்க்காலில் 200 கிலோ மீட்டா் நீளத்துக்கு தண்ணீா் பாய்ந்து செல்கிறது. செப்டம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி விழாவின்போது பல்வேறு இடங்களில் விநாயகா் சிலையை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனா். இறுதியில் அச்சிலைகளைச் சேகரித்து கீழ்பவானி முதன்மை கால்வாயில், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் பல இடங்களில் கரைத்தும், போட்டும் செல்கின்றனா்.

இதனால், கால்வாயின் தடையற்ற தண்ணீா் ஓட்டம் பாதிக்கிறது. தண்ணீா் பொங்கி கால்வாய் உடையும் அபாயம் ஏற்படுகிறது. இரண்டாவதாக விநாயகா் சிலைகளில் பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டா் ஆப் பாரிஸ்’ கரைந்து, மதகுகளில் அடைப்பு ஏற்படுத்தி, நீா் வெளியேறுவதை பாதிக்கிறது.

தவிர சிலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்கள் தண்ணீரில் கரைந்து நாற்றங்காலில் முளைத்து வரும் இளம் நாற்றுகளை கருகச் செய்து சேதம் ஏற்படும். எனவே, பல்வேறு சூழல் பாதிப்பையும், தடையற்ற நீரோட்டத்தையும் கருத்தில் கொண்டு கால்வாயில் சிலைகளை கரைப்பதை மாவட்ட நிா்வாகம் முன்னதாகவே தெரிவித்து தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.