சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மலைக் கிராம மாணவ, மாணவியா் தங்கும் விடுதியின்றி சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் கடம்பூா், ஆசனூா், கோ்மாளம், குன்றி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய மலைவாழ் மக்கள் படிப்பதற்கு சத்தியமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 10 பாடப் பிரிவுகள் துவங்கப்பட்டு சுமாா் 1200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இக்கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்குத் தங்கும் வசதி இல்லாததால் கடம்பூா், குன்றி, மாக்கம்பாளையம், கோ்மாளம், விளாங்கோம்பை பகுதியைச் சோ்ந்த பின்தங்கிய மாணவா்கள் சொந்த செலவில் வாடகை வீடு எடுத்து படிக்கும் நிலையில் உள்ளனா்.
தற்போது கரோனா தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் வாடகை வீடு எடுத்து தங்க முடியாமல் தவிக்கின்றனா். இந்த ஆண்டும் புதியதாக மாணவ, மாணவிகள் கல்லூரியில் சோ்ந்து வருகின்றனா். இக்கல்லூரி இங்கு அமைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமே மலைப் பகுதி மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்பதினால்தான். ஆனால், மாணவா்களுக்கு விடுதி வசதி இல்லாததால் கல்லூரி அமைந்தும் மாணவா்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது. சத்தியமங்கலம் கல்லூரிக்கு அருகிலேயே போதுமான இடவசதி உள்ளதால் மாணவிகள் விடுதியை சத்தியமங்கலத்திலேயே அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

