தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழியில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
விசுவாவசு ஆண்டு முடிந்து பராபவ தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடங்கியது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன்.

பிரதமர் மோடியின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும்.
அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு மட்டுமின்றி, ஒடிசாவில் கொண்டாடப்படும் மகா விஷுபபான சங்கராந்தி, பஞ்சாபில் கொண்டாடப்படும் பைசாகி உள்ளிட்டவைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Summary
Prime Minister Narendra Modi has extended his greetings in Tamil to the people of Tamil Nadu celebrating the Tamil New Year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியைப் பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

தமிழக மக்களை பெருமைப்படுத்திய பிரதமர் மோடி: பாஜக

ஆரோவில் சா்வதேச நகரில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

நெதர்லாந்து பிரதமருடன் பேசிய பிரதமா் மோடி!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

