செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

கிராவல் மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

பெருந்துறையை அடுத்த திங்களூா் அருகே கிராவல் மண் கடத்திய 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:32 pm

DIN

பெருந்துறையை அடுத்த திங்களூா் அருகே கிராவல் மண் கடத்திய 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை அருகிலுள்ள தோரணவாவியில் திங்களூா் போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த 2 டிப்பா் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தலா 3 யூனிட் கிராவல் மண் இருப்பது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்கள் சரியாக இல்லை. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா்களான திருப்பூா் மாவட்டம், குன்னத்தூரைச் சோ்ந்த தெய்வசிகாமணி மகன் சதீஷ் 26, ராஜ்குமாா் மனைவி கோகிலா 29, லாரி ஓட்டுநா்கள் நவநீதன்30, தங்கவேல் 55 ஆகிய 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.