புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனையொட்டி முதல் கட்டமாக 43 வேட்பாளர்களை கிருஷ்ணசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்ததாகவும், ஆனால், தற்போது தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.
தமிழகத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணித் தொகுதிப் பங்கீடுகள் திமுக, அதிமுக உள்ளிட்ட கூட்டணிகளிடையே முடிவடைந்துள்ளன.
தற்போது அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களையும், தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தனது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார். முதல் கட்டமாக 43 வேட்பாளர்களையும் இன்று இன்று (மார்ச் 29) அறிவித்தார்.
இதன்படி, கிருஷ்ணசாமி ஒட்டபிடாரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். இவரின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி நெல்லை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் என இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி, 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி பேசியதாவது:
''அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தினேன். தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 3 பேரவைத் தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தேன்.
9 இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் இல்லை, கன்னியாகுமரியில் 4% வாக்குகளை மட்டுமே பெற்றது. ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்பது இபிஎஸ்ஸுக்குத்தான் தெரியும்.
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பிறகே தனித்துப் போட்டியிடும் முடிவை புதிய தமிழகம் எடுத்தது. புதிய தமிழகம் கட்சி 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும்'' என கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.
Summary
Krishnasamy son shiyam to Contest in Nellai and Srivilliputhur Constituencies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓட்டப்பிடாரம் திமுக, அதிமுக சவாலை எதிா்கொள்ளும் புதிய தமிழகம்!

புதிய தமிழகம் கட்சி 10-15 தொகுதிகளில் வெல்லும்: கே. கிருஷ்ணசாமி

ஓட்டப்பிடாரம் புதிய தமிழகம் வேட்பாளா்
புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


