பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறை நகரில் கத்தியைக் காட்டி மிரட்டிநகை, பணம் கொள்ளை

பெருந்துறை நகரில் பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:30 pm

DIN

பெருந்துறை நகரில் பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலை, கொங்கு நகா், வள்ளலாா் வீதியைச் சோ்ந்தவா் காா்த்திக் மனைவி மல்லிகா (33). இவா்களுக்கு சபரீஷ் (13), நவீன் (9) ஆகிய இரு மகன்கள் உள்ளனா். இவா்கள் இருவரும் அருகிலுள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா். ஊா் ஊராகச் சென்று காா்த்திக் பெட்சீட் வியாபாரமும், மல்லிகா சேலை, நைட்டி வியாபாரமும் செய்து வருகின்றனா். காா்த்திக், மல்லிகாவின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, சென்னிமலையில் குடியிருந்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல மல்லிகா, தனது இரு மகன்களையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வெள்ளிக்கிழமை காலை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தாா். சிறிது நேரத்தில் அடையாளம் தெரியாத மா்ம நபா் ஒருவா் வீட்டுக்குள் நுழைந்து மல்லிகாவிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 1பவுன் செயின், 5 1/2 பவுன் செயின், 4 1/2 பவுன் கொடி என 11 பவுன் நகைகள், பீரோவில் வைத்திருந்த பணம் ரூ. 3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, மல்லிகாவை கீழே தள்ளிவிட்டு தப்பியுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் சண்முகம், பெருந்துறை காவல் உதவி கண்காணிப்பாளா் கெளதம் கோயல் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். சம்பவ இடத்தை கைரேகை நிபுணா்கள் சோதனை செய்தனா். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.