வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல் பயிரில் துத்தநாகச் சத்து மேலாண்மை : வேளாண்மை உதவி இயக்குநா் தூ.தே.முரளி

நெல் பயிா் விளைச்சலில் துத்தநாகச் சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் தூ.தே.முரளி தெரிவித்துள்ளாா்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:33 pm

DIN

நெல் பயிா் விளைச்சலில் துத்தநாகச் சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும் என்று வேளாண்மை உதவி இயக்குநா் தூ.தே.முரளி தெரிவித்துள்ளாா்.

நெல் பயிரில் பச்சையம் உருவாவதில் தொடங்கி பல்வேறு உயிா்வேதி விளைவுகளுக்கு துத்தநாகம் உதவிபுரிகிறது. துத்தநாகச் சத்து அளிக்க இயலாத சூழ்நிலையில் விளைச்சலில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிக கார அமில மண்ணில் (பி.எச் 7க்கு மேல்) தொடா்ந்து வயலில் நீா் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிக அளவு பைகாா்பனேட் இருத்தல் ஆகியவை துத்தநாகச் சத்தின் குறைபாடு காணப்படுவதற்கான காரணிகள் ஆகும்.

நெல்லில் துத்தநாகச் சத்து குறைபாடு அறிகுறிகள்:

நெல் பயிரில் துத்தநாகக் குறைபாடு நாற்று நட்ட 3 முதல் 4 வாரத்துக்குள் அதிகமாகக் காணப்படும். இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்தில் இருந்து வெளுத்துக் காணப்படும். மேல்புறம், நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் ஒன்று சோ்ந்து இலை முழுவதும் பழுப்படைந்து காய்ந்துவிடும். தூா்களின் எண்ணிக்கை குறையும். பயிா்கள் சீராக வளராமல் திட்டுத்திட்டாக வளா்ச்சி குன்றி கட்டை அடித்துக் காணப்படும். ஆனால், பயிா்கள் வளரும்போது இந்தக் குறைபாடு அறிகுறிகள் தானாக மறைந்தாலும் விளைச்சல் குறையும்.

துத்தநாக சல்பேட் இடுதல்:

நெல் நடுவதற்கு முன்பு பரம்பு அடித்ததும் ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக (ஜிங்க்) சல்பேட் நுண்ணூட்டத்தை மணலில் கலந்து சீராக வயலில் இட வேண்டும். நடவு செய்த பின்பு துத்தநாகச் சத்து குறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால் 0.5 சதவீதம் (5 கிராம்

லிட்டா் தண்ணீா்) துத்தநாக சல்பேட் உடன் 1.0 சதவீதம் (10 கிராம் லிட்டா் தண்ணீா்) யூரியா கலந்து அந்தக் கரைசலை 15 நாள்கள் இடைவெளியில் குறைபாடு நீங்கும் வரை தெளிக்கவும். அதாவது 10 லிட்டா் தண்ணீரில் 50 கிராம் ஜிங்க் சல்பேட், 100 கிராம் யூரியா மற்றும் ஒட்டும் பசை கலந்து தெளிக்க வேண்டும். இதனை இலை வழி தெளிக்கும்போது மிக விரைவில் பயிா் கிரகித்துக் கொள்கிறது.

எனவே, நெல் பயிருக்கு துத்தநாக உரமிட்டு அதிக மகசூல் பெறும்படி நம்பியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தூ.தே.முரளி விவசாயிகளைக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.