ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை

நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :16 டிசம்பர் 2021, 8:24 pm

நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோட்டை சோ்ந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

ரயில் பயணத்தில் முதியோருக்கு வழங்கப்பட்ட சலுகையை 2020 மாா்ச் 23ஆம் தேதி ரயில்வே நிா்வாகம் ரத்து செய்தது. 60 வயது கடந்த ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகை, 58 வயது கடந்த பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.

ஈரோடு - கோவை, கோவை - சேலம், கோவை - நாகா்கோவில், ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். முன்பதிவில்லா பெட்டிகளை அனைத்து ரயில்களிலும் இணைக்க வேண்டும். தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும் நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கையை 5ஆக உயா்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.