ஹைதராபாத் : ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டுத் திடலில் இன்று(ஏப். 18) நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எஸ்ஆர்எச் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்களைக் குவித்தது.
சவாலான இலக்கை (195 ரன்களை) விரட்டிய சிஎஸ்கேவுக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டால் வெற்றி என்ற நிலையில் ஜேமி ஓவர்டன்னும் அன்ஷுல் கம்போஜ்ஜும் களத்தில் நின்றனர். கைவசம் 3 விக்கெட்கள் இருந்தன.
அந்த ஓவரின் 4-ஆவது பந்தில் ஜேமி ஓவர்டன் ஆட்டமிழக்க ஹைதராபாத் அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே 8 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே (30) மேத்யூ ஷார்ட் (34) தவிர்த்து வேறெவரும் பெரிதாக சோபிக்காததால் போராடி தோற்றது. இதனையடுத்து, புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி நான்கில் தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது. எஸ்ஆர்எச் 4-ஆவது இடத்தில் உள்ளது.
Summary
Sunrisers Hyderabad vs Chennai Super Kings, 27th Match, Indian Premier League 2026 - Chennai Super Kings lose
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

சென்னையை வெளியேற்றியது குஜராத்
பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


