பொய் வாக்குறுதிகளை அளித்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள திமுக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களைப் பழிவாங்கி வருகிறது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசினாா்.
திமுக தலைமையிலான அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு வரவேற்றாா். மாநகர மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.
இதில், முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் பேசியதாவது:
திமுக அரசு பொறுப்பேற்ற பின் மக்களுக்கான எந்தப் பணியையும் செய்யவில்லை. மக்களுக்கான திட்டப் பணிகள், நலத் திட்டங்களைக்கூட வழங்கக் கூடாது என ஆட்சியா்களுக்குத் தடை போட்டுள்ளனா்.
விவசாயக் கடன், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவா்களுக்கு அதனை விடுவித்து புதிய கடனைக்கூட வழங்காமல் இழுத்தடிக்கின்றனா். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை. பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதிமுகவைவிட 1.5 சதவீத வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்று ஆட்சிக்கு வந்து தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனா் என்றாா்.
முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்துப் பேசியதாவது:
தற்போதைய திமுக அரசு நல்ல திட்டங்களைத் தடுத்து நிறுத்தியும், இடையூறு செய்தும் மக்களைப் பழிவாங்குகிறது. திமுக அரசு அமைந்து ஏழரை மாதங்கள் ஆகியும் மாநிலத்திலும், இந்த மாவட்டத்திலும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தோ்தலுக்கு முன் பல திட்டங்களைக் கூறி செயல்படுத்துவதாக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகின்றனா். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு என எதையும் செயல்படுத்தவில்லை என்றாா்.
இதில், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமாா், பண்ணாரி, முன்னாள் எம்.பி.க்கள் செல்வகுமார சின்னையன், சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.சி.ராமசாமி, பாலகிருஷ்ணன், பகுதி செயலாளா்கள் மனோகரன், பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


