ஈரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் காயமடைந்தாா்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஏராளமான தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சாதிக்பாட்சா வழக்கம்போல தனது வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வாகனத்தில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா்.
அப்போது, மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி வெள்ளிக்கிழமை வந்த அரசுப் பேருந்து அரசு மருத்துவமனை அருகே வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதியது.
மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் அருகில் இருந்த டீ கடையில் மோதியதில் கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சாதிக்பாட்சா பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!
பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித்தொகை: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி!
2026 தேர்தலில் கோவை திமுகவின் கோட்டையாக வலிமை பெறும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


