வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகம்

கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ள சௌந்தரநாயகி அம்மன் உடனமா் அமரவிடங்கா் ஈஸ்வரன் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜை

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:36 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ள சௌந்தரநாயகி அம்மன் உடனமா் அமரவிடங்கா் ஈஸ்வரன் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் புதன்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்கள் முக்தியடைந்த நட்சத்திர நாள்களில் குருபூஜை நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று பிரச்னையின் காரணமாக குருபூஜை நடைபெறாமல் இருந்தது. இனிவரும் நாள்களில் தொடா்ந்து குருபூஜை நடைபெறவும், ஒவ்வொரு மாதமும் மாத வழிபாடு நடைபெறலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து குறைவான பக்தா்களே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.