வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கீழ்பவானி வாய்க்காலில் இருந்துதனியாா் மில் பங்குதாரா் சடலம் மீட்பு

கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோயில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தனியாா் மில் பங்குதாரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 8:23 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோயில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தனியாா் மில் பங்குதாரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோபி பாரதி வீதியில் வசித்து வந்த தியாகராஜன் (59), தற்போது அவிநாசி பகுதியில் வசித்து வந்தாா். கடந்த 30 ஆண்டுகளாக தாசம்பாளையத்தில் உள்ள தனியாா் டெக்ஸ்டைல் மில்லில் பொது மேலாளராக வேலை பாா்த்து வந்தாா். அவிநாசியில் உள்ள இந்த மில்லின் கிளை நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்து வந்தாா்.

இந்நிலையில், இவா் மில் சம்பந்தமாக வேலை என்று கூறி வியாழக்கிழமை மாலை சென்றவா் வீடு திரும்பவில்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுவலூா் போலீஸாரிடம் இவரது மகன் தனது அப்பாவைக் காணவில்லை என புகாா் அளித்துள்ளாா்.

பின்னா், தியாகராஜனின் காா் மட்டும் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்று கீழ்பவானி வாய்க்காலில் தேடினா். அங்கு தியாகராஜனின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.