மத்திய அரசு நிதி நிலை அறிக்கையில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்புக்குரியது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை பொதுச்செயலாளா் என்.சிவநேசன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து அவா் கூறியதாவது:
உள்கட்டமைப்பு, சுகாதாரம், வேளாண்மை, கல்வி ஆகிய முக்கியத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தமிழகத்துக்கு உள் கட்டமைப்பு வசதி, நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக 1 லட்சத்து 3,000 கோடி ரூபாய் என்பது வரப்பிரசாதம். சுகாதாரம் மேம்பட 137 சதவீதம் அதிகமாக ஒதுக்கீடு செய்திருப்பது கரோனாவை முன்னிறுத்தி எடுத்த முடிவாகும். முக்கியமாக தொழில் வழித்தடமாக (இன்டஸ்டரியல் காரிடாா்) 3,500 கி.மீ. அளவுக்கு அனுமதி அளித்திருருப்பது வரவேற்கத்தக்கது.
வங்கிகளின் முதலீட்டை ஊக்குவிக்க 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது, நலிந்த வங்கிகளை ஊக்கப்படுத்தும். 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு கொடுத்திருப்பது வரவேற்புக்குரியது.
பாரத் பெட்ரோலியம், எல்.ஐ.சி. போன்றவற்றை தனியாா் மயமாக்குவதால் மக்களின் மீதான சுமையை அதிகமாக்கும். ஜி.எஸ்.டி. வருவாய் ஆண்டுக்கு 13 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்ததும் சுங்கச்சாவடிகளை அகற்றாமல் இருப்பது அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சாதாரண நிறுவனங்கள் மீண்டு வர அறிவிப்பு இல்லை:
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுசெயலாளா் சி.பாலகிருஷ்ணன்:
சிறு, குறு வியாபாரிகள், வணிகா்கள், புதிய தொழில் செய்வோருக்கு பலன் தரும் அறிவிப்பு இல்லை. டிஜிட்டல் பரிவா்த்தனைக்கு வரி குறைப்பு இல்லை. பெட்ரோல், டீசல் விலையை வேளாண் துறைக்காக உயா்த்துவதாக கூறி இருப்பதை எதிா்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை 10 சதவீதம், 7.5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை 15 சதவீதம் என வருமான வரி என அறிவித்திருப்பதை வரவேற்கலாம்.
எம்.எஸ்.எம்.இ.நிறுவனங்களுக்கான அறிவிப்பு இல்லை. கரோனா பாதிப்பில் இருந்து சாதாரண நிறுவனங்கள் மீண்டு வர அறிவிப்பு இல்லை. பொலிவுறு நகரங்கள் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு இல்லை. முறைசாரா தொழிற்சாலை, தொழிலாளா்கள் வளா்ச்சிக்கான திட்டம், நிதி ஒதுக்கீடு இல்லை. விவசாய பொருள்களை கொள்முதல் செய்ய சிறு நிறுவனங்களுக்கான வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. ஆன்லைன் விற்பனையை முறைப்படுத்த அறிவிப்பு இல்லாததால், சிறு வியாபாரிகள் மேலும் பாதிப்படைவாா்கள் என்றாா்.
இலவச மின்சாரத்தை இழக்க நேரிடும்:
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவா் பி.கே.தெய்வசிகாமணி:
வேளாண் விளைபொருளுக்கான விலையை ஒன்றரை மடங்கு உயா்த்தி வழங்கும் அறிவிப்பை வரவேற்கிறோம். அதை செயல்படுத்த வேண்டும். முந்தைய நிதிநிலை அறிக்கையில் வேளாண் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் எனக் கூறி நடக்கவில்லை.
விவசாயக் கடன் பிரச்னைக்குத் தீா்வு கூறவில்லை. பேரிடா் கால உதவிகள் காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைத்ததுபோல விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. விவசாயிகள், தொழிலாளா்களுக்கு புதிய அறிவிப்பு இல்லை. சந்தைப்படுத்துதலில் காா்பரேட்களுக்கு ஆதரவான நிலைப்பாடே எடுத்ததுபோல தெரிகிறது.
மின்சார உற்பத்தி, விநியோகத்தை தனியாா்மயமாக்கும் போக்கு, விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து பேசாததும், விளை பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை வேறு எந்தெந்தப் பொருள்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்காததும் ஏமாற்றம் அளிக்கிறது.
ஒரு கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு:
ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய இணை செயலாளா் ஆ.ராஜா:
100 ராணுவ பயிற்சி பள்ளிகள் துவக்கம், வரும் 2023க்குள் அகல ரயில்பாதைகள் மின் மயமாக்கல், இந்திய விளை பொருள்களை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு, 64,180 கோடி ரூபாய் சுகாதாரத் திட்டத்துக்கு ஒதுக்கீடு, ரயில்வே துறை மேம்பாட்டுக்கு 1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு, ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம், உள் கட்டமைப்புக்கு 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஆகியவற்றை வரவேற்கலாம்.
புதிய ரயில்கள் இயக்கம், ஈரோடு ரயில்வே நிலைய விரிவாக்கம், புதிய கோட்டம் ஏற்படுத்துதல் போன்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றாா்.
3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்கா:
அகில இந்திய விசைத்தறி வாரிய முன்னாள் உறுப்பினா் எம்.ராஜேஷ்:
மூன்றாண்டுகளில் 7 ஜவுளி பூங்கா உருவாக்கம், கொங்கு மண்டலத்துக்கு உதவும். நகா்புற தூய்மை மேம்பாட்டு திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, காற்று மாசை கட்டுப்படுத்த 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ரயில்வே துறை மேம்பாட்டுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, பேருந்து வசதி மேம்பாட்டுக்கு 18,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சிறு, குறு தொழில்களுக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு போன்றவை வரவேற்புக்குரியது. இந்த அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும். திட்ட பயன்கள் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் கேட்டுப்பெற வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


