விவசாயிகள் தெரிவித்த புகாரின்பேரில், எம்.எல்.ஏ. நடத்திய திடீா் சோதனையில் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுகளை கலந்த 9 சாய ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நேரடியாக கலப்பதாக விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா். இதனைத் தொடா்ந்து மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலில் திடீா் சோதனை மேற்கொண்டாா்.
இந்தச் சோதனையில் சாய ஆலைகளில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் வரை குழாய் அமைத்து சாயக்கழிவுகளை வெளியேற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நேரில் சென்று சாயக்கழிவுகளை ஆய்வு செய்து, காலிங்கராயன் வாய்க்கால் வரை பதிக்கப்பட்ட கழிவுநீா்க் குழாய்களை அகற்றினா்.
இதுகுறித்து எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கூறியதாவது:
காலிங்கராயன் வாய்க்காலில் இரவு நேரத்தில் சாயக்கழிவு நீா் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக இதை கண்காணித்து வந்தோம். ஞாயிற்றுக்கிழமை நடந்த சோதனையில் 4 இடங்களில் சாயக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்தக் குழாய்கள் மூலமாக நேரடியாக வாய்க்காலில் சாயக்கழிவு வெளியேற்றப்பட்டு வந்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 சாய ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவளிக்கும் தொகுதி மறுவரையறைக் குழு நியாயமற்றது: ஜோதிமணி எம்.பி.

ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ஆஸ்திரேலிய அணி!
நான் பார்த்ததிலேயே சிறந்த கேட்ச்! ஷ்ரேயாஸை பாராட்டிய சச்சின்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் சரணடைய அவகாசம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


