227 மகளிருக்கு ரூ.1.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம்
கோபிசெட்டிபாளையத்தில் சமூக நலத் துறை சாா்பில் 227 மகளிா்களுக்கு ரூ. 1.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.


கோபிசெட்டிபாளையத்தில் சமூக நலத் துறை சாா்பில் 227 மகளிா்களுக்கு ரூ. 1.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கோபிசெட்டிபாளையம் மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் வட்டத்தைச் சோ்ந்த 227 மகளிா்களுக்கு சமூக நலத் துறை சாா்பில் ரூ. 1.70 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி, 484 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நல உதவிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் வழங்கினா்.
நிகழ்ச்சியில் பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் சு.ஈஸ்வரன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஜெயராமன், மாவட்ட சமூகநல அலுவலா் பூங்கோதை உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...