ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

9, 11ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: அமைச்சா்

திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை (பிப்ரவரி 8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

News image

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் (கோப்புப்படம்)

Updated On :8 பிப்ரவரி 2021, 1:36 am

DIN

திட்டமிட்டபடி 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு திங்கள்கிழமை (பிப்ரவரி 8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றிய அதிமுக அலுவலகத்தை அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா கிருஷ்ணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தனா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் செய்ய முடியாது. திட்டமிட்டபடி திங்கள்கிழமை (பிப்ரவரி 8) 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். மீதமுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

இதையடுத்து சத்தியமங்கலத்தில் நடைபெற்ற தனியாா் திருமண மண்டபம் திறப்பு விழாவில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.