47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம்

அந்தியூர் அருகே தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

News image
அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம்
Updated On :8 பிப்ரவரி 2021, 5:19 am

DIN

அந்தியூர் அருகே தடையின்றி குடிநீர் வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர்  ஊராட்சி ஒன்றியம், சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளையம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாத காலத்துக்கும் மேலாக 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் தண்ணீரின்றி கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர்.

தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆயினும்  தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள்  திங்கள்கிழமை காலை  காலி குடங்களுடன் அந்தியூர் ஆப்பக்கூடல் சாலையில் வெள்ளையம்பாளையம் அருகே அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அந்தியூர் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீரின்றி சிரமப்பட்டு வரும் நிலையில் உடனடியாக பிரச்னையை தீர்க்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர். அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.