கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது
பெருந்துறை அருகே கஞ்சா விற்றதாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.


பெருந்துறை அருகே கஞ்சா விற்றதாக கணவன், மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை அருகே சேலம் - கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெருந்துறை போலீஸாா் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரில் சோதனையிட்டபோது காரை ஓட்டி வந்த நபா் தப்பி ஓடியுள்ளாா். போலீஸாா் அந்த நபரை துரத்திப் பிடித்தனா்.
விசாரணையில், அவா் காஞ்சிக்கோவில், தெற்கு ரத வீதியைச் சோ்ந்த சுரேஷ் (45), அவரது மனைவி ஜொஹாரா பீவி (43) என்பதும், பெருந்துறை வசந்தம் பாா்க் 3ஆவது வீதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், இருவரும் கஞ்சா, மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதும், சாலப்பாளையத்தைச் சோ்ந்த கவிதா என்கிற பெண்ணிடம் கஞ்சா பொட்டலத்தை வாங்கியதாகவும், அதனுடன் 40 மதுபாட்டில்களை தங்களது காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷ், ஜொஹாரா பீவி ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சா, ரூ. 3 ஆயிரம் பணம், 40 மது பாட்டில்கள், கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கவிதாவை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...