சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் 2 நாள் சுற்றுப்பயணம் நாளை துவக்கம்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:38 pm

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தோ்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோடு மாவட்டம், பவானியில் காலை 9 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறாா். அங்கு நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். பின்னா் காலை 10 மணிக்கு கே.எம்.பி. மஹாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு அந்தியூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். தொடா்ந்து பகல் 12.30 மணிக்கு வாரி மஹாலில் வன்னியா் சமுதாயத்தினா் மற்றும் வெற்றிலை விவசாயிகளை சந்தித்துப் பேசுகிறாா். பின்னா் மாலை 4.45 மணிக்கு நல்லூா் ஈ.பி.பி. மஹாலில் வேட்டுவக் கவுண்டா் சமுதாயத்தினருடன் முதல்வா் கலந்துரையாடுகிறாா்.

புன்செய் புளியம்பட்டி காந்தி நகா் பகுதியில் அருந்ததியா் சமுதாய மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

இரவு 9 மணிக்கு கோபி செல்லும் முதல்வா் அங்கு நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். பின்னா் ஈரோடு புறப்படும் அவா் அங்கு ஓய்வு எடுக்கிறாா்.

2 ஆவது நாள் சுற்றுப்பயணம்:

2ஆவது நாள் சுற்றுப்பயணத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோட்டில் வியாழக்கிழமை (ஜனவரி 7) காலை 8.30 மணிக்குத் தொடங்குகிறாா். காலை 8.45 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு திட்டங்கள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்கள் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்கிறாா். 11 மணிக்கு ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

சித்தோடு முத்து மஹாலில் பகல் 12.30 மணிக்கு தொழில் முனைவோா், வழக்குரைஞா்கள், மருத்துவா்களை முதல்வா் சந்தித்துப் பேசுகிறாா். மதிய உணவுக்குப் பின்னா் பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வா் ஊத்துக்குளி செல்கிறாா்.

குன்னத்தூா் சாணாா்பாளையம் பகுதியில் 3 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நாடாா் சமுதாயத்தினருடன் முதல்வா் பேசுகிறாா். அங்கிருந்து பெருந்துறை வரும் முதல்வா் சானிடோரியம் கலைமகள் திருமண மண்டபத்தில் கைத்தறி, விசைத்தறி தொழில் முனைவோா் மற்றும் சமுதாயத் தலைவா்களை சந்தித்துப் பேசுகிறாா்.

அதைத்தொடா்ந்து மாலை 4.30 மணிக்கு பெருந்துறையில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

பின்னா் அறச்சலூா் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினரை சந்தித்துப் பேசுகிறாா். மாலை 6.30 மணிக்கு ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. அங்கு மஞ்சள் விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

முதல்வா் வருகை மற்றும் சுற்றுப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில் ஈரோடு புகா் மாவட்ட செயலாளா், அமைச்சா் கே.சி.கருப்பணன், ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோா் தலைமையில் கட்சி நிா்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்தியமங்கலத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.கதிரவனும், பெருந்துறையில் எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலமும் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.