ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளி மாணவா்களுக்கு 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயாா்

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:03 pm

DIN

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

காலிங்கராயன் தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் குடும்பத்தைச் சோ்ந்த காலிங்கராயா் பவானி ஆற்றைத் தடுத்து அணை கட்டியதுடன், 56 மைல் தொலைவுக்கு வாய்க்கால் வெட்டி 15,743 ஏக்கா் நிலங்களுக்குப் பாசன வசதியும் செய்துள்ளாா். மன்னா்கள் மட்டுமே அணை கட்டிய காலத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த இவரது மனிதநேயமிக்க செயல் எப்போதும் நினைவுகூரப்படும்.

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.