ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பவானியில் காலிங்கராயன் சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் காலிங்கராயன் உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:03 pm

DIN

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் காலிங்கராயன் உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்ட தை 5ஆம் நாள் காலிங்கராயன் தினமாகக் கொண்டாட தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு பவானி காலிங்கராயன் மணிமண்டபத்தில் உள்ள முழு உருவச் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, எஸ்.ஈஸ்வரன், வி.பி.சிவசுப்பிரமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, தமாகா மத்திய மாவட்ட தலைவா் பி.விஜயகுமாா், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், துணைமேயா் கே.சி.பழனிசாமி, சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா்.வரதராஜன், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.மகேஸ்வரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் மாநில விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக சாா்பில் ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் சு.முத்துசாமி தலைமையில் காலிங்கராயன் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, நிா்வாகிகள் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், வி.சி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் அதன் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கட்சியின் மாநில அமைப்பாளா் துரை ராஜா, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மேலும், அரசியல் கட்சியினா், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.