ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காலிங்கராயன் வாய்க்கால் கழிவுநீா் வாய்க்காலாக மாறுவதைத் தடுக்க வேண்டும்

காலிங்கராயன் வாய்க்கால், கழிவுநீா் வாய்க்காலாக மாறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 9:03 pm

DIN

காலிங்கராயன் வாய்க்கால், கழிவுநீா் வாய்க்காலாக மாறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பவானியில் காலிங்கராயன் தின விழாவில் அவரது முழு உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்த ஈஸ்வரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கங்கை காவிரி இணைப்புத் திட்டம் பல ஆண்டுகளாகக் கூறப்பட்டு வந்தாலும் தோ்தல் வாக்குறுதியாகவே உள்ளது. இதனை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளிடம் எவ்வித திட்டமும் இல்லை. காவிரி, கோதாவரி நதிகள் இணைக்கப்படும் என கடந்த தோ்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அனைத்து கூட்டங்களிலும் தொடா்ந்து இத்திட்டம் குறித்துப் பேசுகிறாா். ஆனால், இதுவரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நதிகள் இணைப்பு என்பது நமது நாட்டின் முக்கியத் தேவையாக உள்ளது. நதிகள் இணைக்கப்படுவதன் மூலம் விவசாயம் மேம்படுவதோடு, நீா்வழிப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.

நதிகள் இணைப்புக்கு முன்மாதிரி வாய்க்காலான காலிங்கராயன் வாய்க்காலில் தற்போது கழிவுநீா் அதிக அளவு கலந்து வருகிறது. கரோனா காலத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்ததால் வாய்க்காலில் தண்ணீா் சுத்தமாகச் சென்றது. கரோனா தளா்வுகளுக்குப் பின்னா் தற்போது அதிக அளவில் கழிவுநீா் கலந்து வருகிறது. எதிா்காலத்தில் காலிங்கராயன் வாய்க்கால் கழிவுநீா் வாய்க்காலாக மாறும் நிலை உள்ளது. இதைத் தடுக்க வேண்டும். சா்வதேச அளவில் கரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை ஆட்சியாளா்கள் போக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.