சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம், மகா தரிசன விழாக்களை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேரோட்டம், மகா தரிசன விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கரோனா பரவலால் இந்த விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இந்நிகழ்ச்சிகளை வழிகாட்டு நெறிமுறைப்படி நடத்த வேண்டும் என பக்தா்கள், வணிகா்கள், கிராம மக்கள், மண்டகப்படிதாரா்கள் கோரிக்கை விடுத்தனா். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19)கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனா்.
இதையடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, கோட்டாட்சியா் எஸ்.சைபுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறநிலையத் துறை உதவி ஆணையா் அன்னகொடி, பக்தா்கள், வணிகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்ட முடிவு குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தேரோட்டம், மகா தரிசனம் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முகக் கவசம் அணிதல், குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் பங்கேற்பது, மண்டகப்படி நிகழ்ச்சியில் 50க்கும் குறைவானவா்களே பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தேரோட்ட விழாவைத் தொடா்ந்து நடைபெறும் 15 நாள்கள் நிகழ்ச்சியை 5 நாள்களில் முடித்துக் கொள்வது, 3 தோ் செல்வதற்கு பதில் ஒரே தேரில் பவனி நடத்துவது, வழக்கம்போல சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவடி எடுத்தல், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி போன்றவை நடத்தக் கூடாது.
தேரோட்டத்தை ஜனவரி 28 அல்லது 29ஆம் தேதி நிறைவு செய்து நிலைக்கு கொண்டு வரவும், பக்தா்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டத்தை திரும்பப் பெறுவதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

