யானை-மனித மோதலைத் தவிர்க்க புதிய கருவி கண்டுபிடிப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை-மனித மோதலை தவிர்க்க, ஒலி எழுப்பி யானையை விரட்டும் புதிய தற்காப்பு கருவியை பண்ணாரிஅம்மன் தொழில்நுட்கக் கல்லூரி பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை-மனித மோதலை தவிர்க்க, ஒலி எழுப்பி யானையை விரட்டும் புதிய தற்காப்பு கருவியை பண்ணாரிஅம்மன் தொழில்நுட்கக் கல்லூரி பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவிக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர், பண்ணாரி, தாளவாடி, கடம்பூர், தலமலை வனத்தையொட்டி வனக் கிராமங்கள் உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள், காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் கிராமத்துக்குள் புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்துகின்றன. யானைகளை விரட்டும்போது மனித விலங்குகள் மோதலில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. விளைநிலங்களில் பயிர்ச்சேதத்தை தடுப்பதற்கு பண்ணாரிஅம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசியர்கள் சஞ்சய்தேப், சரவணகுமார், ராம்குமார் மற்றும் குணசேகரன் ஆகியோர் யானை உள்ளிட்ட விலங்குகளை விரட்டும் புதிய தற்காப்பு ஒலி கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தும் போது விவசாயிகள் யானை விரட்ட ஆபத்தான நேரத்தில் இக்கருவியை பயன்படுத்தலாம். இக்கருவியிருந்து வரும் பயமுறுத்தும் அதிக (வித்தியாசமான சப்தம்) ஒலியின் காரணமாக யானைகள் சற்று பயந்து நிற்கும்போது சில விநாடிகளில் யானையிடமிருந்து தப்பித்துக்கொள்முடியும். தொடர்ந்து ஒலி எழுப்புவதின் மூலமாக யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கலாம். இரவில் யானை இருக்கும் இடத்தை அறிய டார்ச் பொருத்தப்பட்டுள்ளது. 5 விநாடிகள் ஒலி என 40 முறை தொடர்ந்து ஒலி எழுப்பி யானைகளை விரட்டலாம்.

மிகவும் பாதுகாப்பு மிகுந்ததும் எடை குறைவாகவும் மிகவும் எளிதாகவும் எடுத்து செல்லும் வகையிலும் சோலார் மூலம் பேட்டரி சார்ச் செய்யும் வடிவமைக்கப்பட்ட இக்கருவியின் உற்பத்தி செலவு ரூ.4500 என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இக்கருவிக்கு தேவையான பேட்டரிகள் எளிதாக சந்தையில் கிடைக்கும். இந்த தற்காப்பு கருவியில் இரு பேட்டரிகள் கொண்டு பெரிய கருவியும் ஒரு பேட்டரி கொண்டு சிறிய கருவியும் உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், ஜீரஹள்ளி, பவானிசாகர் மற்றும் கேரளா, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் இக்கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழக வனத்துறையினர் இக்கருவியை பயன்படுத்தி அதன் செயல்திறனை பரிசோதித்து யானை விரட்டும் பணிக்கு உதவியதாக தெரிவித்தனர். இக் கருவிக்கான நிதியுதவியை மத்திய அரசின் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சர்வசேத வனவிலங்கு நிதியம் ஆகியவை வழங்கியுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...