ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ. மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாலை தொடங்கிய மழை சிறிது நேரம் இடைவெளிவிட்டு மீண்டும் நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பெய்தது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மழைத் தூறல் இருந்தது. கன மழை காரணமாக ஈரோடு மாநகா் பகுதியில் பிச்சைக்காரன்பள்ளம், பெரும்பள்ளம் ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சூரம்பட்டி வலசு அணைக்கட்டு நிரம்பி வழிந்தது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மி.மீ. மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கவுந்தப்பாடி 65, பவானிசாகா் 62.8, கோபி 29, ஈரோடு 24, கொடுமுடி 22.4, அம்மாபேட்டை 18.8, நம்பியூா் 10, மொடக்குறிச்சி 8, குண்டேரிப்பள்ளம் 7, சென்னிமலை 3, பவானி 2.8, தாளவாடி 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு

ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

