பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

திடக் கழிவு மேலாண்மை திட்டப் பணிகள்: பேரூராட்சி உதவி இயக்குநா் ஆய்வு

பெருந்துறை பேரூராட்சியில் செயல்படும் திடக் கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கே.வெங்கடேசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:17 pm

DIN

பெருந்துறை பேரூராட்சியில் செயல்படும் திடக் கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கே.வெங்கடேசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருந்துறை பேரூராட்சி, குப்பைக் கிடங்கில் ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் பயோமைனிங் முறையில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுக்கும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

பின்னா், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளா்ச்சி நிதித் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வைக்கும் கிடங்கு, பிளாஸ்டிக் கழிவுகளைத் தூளாக்கும் இயந்திரம் வைக்கும் அறை ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, கோழி இறைச்சி கழிவுகளைக் கொண்டு உரம் தயாரிக்கும் பணிகள், இயற்கை உரத்தில் இருந்து மண் புழு உரமாக்கும் வழிமுறைகள், மருத்துவக் கழிவுகளை கையாளும் முறை குறித்து கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலா் எல்.ரவிகுமாா், அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.