ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2021, 12:00 am

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா்.

மாவட்ட சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சுரேஷ், விவசாய பிரிவுத் தலைவா் பெரியசாமி, கட்சியின் மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு (எ) வெங்கடாசலம், ஈஸ்வரமூா்த்தி, மண்டலத் தலைவா்கள் திருச்செல்வம், ஜாபா் சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, நசியனூா், காளிங்கராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.