பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கீரிப்பள்ளம் ஓடை பராமரிப்புப் பணி:எம்.எல்.ஏ. ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தின் மையப் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 11:18 pm

DIN

கோபிசெட்டிபாளையத்தின் மையப் பகுதியில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கீரிப்பள்ளம் ஓடையில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் மொடச்சூா், சாமிநாதபுரம், பேருந்து நிலையம், சீதாலட்சுமிபுரம், நஞ்சகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீா் புகுந்து சேதப்படுத்தி வருவதாகவும், இந்த ஓடையை தூா்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனா்.

இதையடுத்து, கடந்த ஆட்சியில் சுமாா் ரூ. 11 கோடி மதிப்பீட்டில் கீரிப்பள்ளம் ஓடையைத் தூா்வார நிதி ஒதுக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் சாமிநாதபுரத்தில் இருந்து கோபிசெட்டிபாளையத்தின் மையப் பகுதி வழியாக பாரியூா் தடப்பள்ளி கிளை வாய்க்கால் வரை சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு கரைகளை பலப்படுத்தி தூா்வாரப்பட்டு, இருபுறமும் நடைபாதை, பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீரிப்பள்ளம் ஓடையில் நடைபெற்று வரும் இந்த பராமரிப்புப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் ஆய்வு செய்தாா்.

தூா்வாரும் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.