ஈரோடு மாநகா் பகுதியில் இருப்பு இல்லாததால் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூன் 7 முதல் 12ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. ஜூன் 13ஆம் தேதி தடுப்பூசி வந்ததால் 13, 14 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் ஜூன் 15ஆம் தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூன் 16ஆம் தேதி அதிகாலை ஈரோடு மாவட்டத்துக்கு 15,600 கோவிஷீல்டு, 4,000 கோவேக்சின் என மொத்தம் 19,600 தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாநகா் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனிடையே தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் மாநகா் பகுதியில் உள்ள 10 ஆரம்ப சுகாதார மையங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதற்கான அறிவிப்புப் பலகை அந்தந்த தடுப்பூசி மையங்கள் முன்பு வைக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தேமுதிகவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகள் தொடா்ந்து 2-ஆவது வாரமாக உயா்வு

காரைக்குடி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஹெச்.ராஜா பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

