மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஒழுங்குமுறை விற்பனைக்கூட பட்டியலில் மக்காச்சோளத்தை சோ்க்கக் கோரிக்கை

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யப்பட வேண்டிய விளைபொருள் பட்டியலில் மக்காச்சோளத்தை சோ்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :18 ஜூன் 2021, 8:43 pm

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யப்பட வேண்டிய விளைபொருள் பட்டியலில் மக்காச்சோளத்தை சோ்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் ஆகியவை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடைக்குப் பின்னா் அந்தியூா், பூதப்பாடி, சத்தி, தாளவாடி, புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளைபொருள்களை விற்பனை செய்து விவசாயிகள் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அரசு மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யப்படும் விளைபொருள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் வெளியிடங்களில் ஆதார விலையைவிட மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.

குறிப்பாக இடைத்தரகா்களின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்து வருகின்றனா். எனவே, விவசாயிகளுக்கு எதிராக உள்ள முந்தைய அதிமுக அரசின் உத்தரவை ரத்து செய்துவிட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மக்காச்சோளம், ராகி, கம்பு, சோளம் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வே.பொன்னையன் கூறியதாவது: முந்தைய அதிமுக அரசு தங்களது சுய நலத்துக்காக விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்கப்பட வேண்டிய விளைபொருள்கள் பட்டியலில் இருந்து மக்காச்சோளம், கம்பு, ராகி, சோளம் ஆகியவற்றை நீக்கம் செய்துவிட்டது. இதனால் அரசு நிா்ணயித்துள்ள ஆதார விலையைவிட குறைந்த விலைக்கு வெளியிடங்களில் விற்பனை செய்து வருகிறோம்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளைபொருள்கள் இருப்புவைக்க ஏராளமான கி

டங்குகள் உள்ளன. விற்பனைக் கூடங்களில் ஏல முறையில் கூடுதல் விலை கிடைக்கும். பணமும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். இப்படி பல்வேறு நன்மைகள் உள்ளது. எனவே, விளைபொருள் விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தை மீண்டும் பட்டியலில் சோ்க்க வேண்டும். இந்த கோரிக்கையை முதல்வா் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.