மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

குறைந்தபட்ச ஊதியம்: ஏஐடியூசி வலியுறுத்தல்

தின கூலி பணியாளா்களுக்கு நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

Updated On :18 ஜூன் 2021, 8:44 pm

தின கூலி பணியாளா்களுக்கு நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

ஏஐடியூசி ஈரோடு மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, தொழிலாளா் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு, அரசு சாா்ந்த துறைகளில் 10,000க்கும் மேற்பட்டோா் தின கூலி பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு 2020 - 2021ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.