தாளவாடி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை வியாழக்கிழமை பெய்தது. பலத்த காற்று காரணமாக தாளவாடி - குமிட்டாபுரம் செல்லும் சாலையில் உள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரத்தை ஒட்டிச் செல்லும் மின் ஒயா் மீது மரம் விழுந்ததில் மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதுகுறித்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மின் வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியா்கள் அறுந்து கிடந்த மின் ஒயரை சீா்செய்தனா்.
பின்னா், சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் சேர 3,145 குழந்தைகள் விண்ணப்பம்

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடுமலையில் அதிமுகவை வீழ்த்துவோம்! திமுக வேட்பாளா் மு.ஜெயக்குமாா் உறுதி

பிஎபி கால்வாய்களை பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்! மடத்துக்குளம் திமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


