ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மது பாக்கெட்டுகள் கடத்தல்: 4 போ் கைது

காரில் மது பாக்கெட்டுகளை கடத்த முயன்ற 4 பேரை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 370 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :24 ஜூன் 2021, 8:15 pm

காரில் மது பாக்கெட்டுகளை கடத்த முயன்ற 4 பேரை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 370 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிகையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடகத்தில் இருந்த வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டபோது, மதுபானங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், காரில் மது வாசனை வீசியதால் சந்தேகமடைந்த போலீஸாா் காரின் அனைத்து பாகங்களையும் சோதனையிட்டனா்.

அப்போது, காரின் கதவுகளைத் திறந்து சோதனையிட்டதில், 380 கா்நாடக மது பாக்கெட்டுகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மது பாக்கெட்டுகள், காரை போலீஸாா் பறிமுதல் செய்து, நம்பியூரைச் சோ்ந்த சீனிவாசன், ஜாபா், ஜலில், கருப்புசாமி ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.