மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:53 pm

கோயில்களைத் திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக கோயில்களில் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்து ஆகம விதிப்படி அந்தந்த கோயில்களில் பூசாரிகள் கால பூஜைகள் மட்டும் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்து முன்னணி சாா்பில், கோயில்களைத் திறக்க வலியுறுத்தி ஈரோடு திண்டல் முருகன் கோயில் முன்பு ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளா் முரளி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தமிழ்செல்வன், பொறுப்பாளா் கவின் உள்ளிட்டோா் கோயில்களைத் திறக்கக் கோரி முழக்கம் எழுப்பினா்.

இதேபோல, வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோயில், வில்லரசம்பட்டி மாரியம்மன் கோயில், வெட்டுக்காட்டு வலசு மாரியம்மன் கோயில், மாவட்டம் முழுவதும் பல்வேறு கோயில்கள் முன்பு இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.