ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிதயுதவி

 பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில், மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:51 pm

 பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில், மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவருடைய மகள் மித்ரா மிகவும் அரிதான நூதன முதுகெலும்பு தசைநாா் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். அரிதான மரபணு கோளாறானது சிறுமி மித்ராவினுடைய தசைகளை ஒன்றன்பின் ஒன்று என கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இதன் காரணமாக சிறுமி மித்ரா மூச்சுவிடவும், உணவை சாப்பிட முடியாமலும் தவித்து வருகிறாா்.

சிறுமி மித்ராவுக்கு சிகிச்சை மேற்கொள்ள சுமாா் 16 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் சதீஷின் குடும்பத்தினா் செய்வதறியாது திகைத்துள்ளனா். இதையடுத்து, பணம் திரட்டுவதற்காக நன்கொடையாளா்களின் உதவியை ஆன்லைனில் சதீஷ்குமாா் கோரியுள்ளாா்.

இதையடுத்து, பண்ணாரி அம்மன் குழுக்களின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், மித்ராவின் மருத்துவச் செலவுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.