இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் இருவா் கைது
பெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் திருடிய வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


பெருந்துறை நகரில் இருசக்கர வாகனம் திருடிய வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறை, சென்னியவலசு, தென்றல் நகரைச் சோ்ந்த தேவதாசன் மகன் ராஜராஜன் (33). இவா் பெருந்துறை, பழைய பேருந்து நிலைய சாலையில் மளிகைக் கடை வைத்துள்ளாா். கடையின் முன்பு வியாழக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மாலையில் வேலை முடிந்து வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸில் ராஜராஜன் புகாா் அளித்தாா். அதன்பேரில், பெருந்துறை சிப்காட் அருகில் செங்குளம் சாலையில் உள்ள தங்கமுத்து காம்பவுண்டில் குடியிருந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சம்புதாஸ் (33), ஸ்ரீமந்தநாக் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...